சட்டவிரோத குவாரி நடத்தியவர்களிடம் அபராதம் வசூலிக்க, வருவாய்த்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்..? உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

0 2576

சட்டவிரோத குவாரி நடத்தியவர்களிடம் அபராதம் வசூலிக்க, வருவாய்த்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்? என்பது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வளையன்வயல் கிராமத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்தும் ராமைய்யா, கருப்பைய்யா மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவராக உள்ள அழகு ஆகியோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், சட்டவிரோதமாக குவாரி நடத்தியவர்களுக்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இன்னும் வசூலிக்கப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அபராதத்தை வசூலிக்க வருவாய்த்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர்? என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments