காசிரங்கா தேசிய பூங்காவில் சதுப்பு நில மான்கள் கணக்கெடுப்பு

0 3077

சாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 868 சதுப்பு நில மான்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது மான்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு சற்று குறைந்திருக்கிறது. கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் காசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இதே போல, காசிரங்கா பூங்காவில் பறவைகளின் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதில், சுமார் 126 பறவை இனங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments