யூ டியூப் பதிவுகள்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..?
யூ டியூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை யூ டியூபில் விமர்சித்த சாட்டை முருகனின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூ டியூபில் வெடிகுண்டு மற்றும் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்தும் கற்று தரப்படும் நிலையில், யூ டியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூ டியூபும் குற்றவாளி தான் என குறிப்பிட்ட நீதிபதி, தேவையற்ற பதிவுகளை தடுக்க யூ டியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? என்றும் கூறினார். மேலும், இவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்ன திட்டம் உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Comments