தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3911

மிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் இந்தாண்டு ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகளும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியும், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளும்  நடைபெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு புதிதாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, நெல்லை மாவட்டம்  துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அகழாய்வுப் பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, செப்டம்பர் மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது.

அத்தோடு, சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் கண்டறிய கடலோரங்களில் முன்களப் புல ஆய்வும் நடைபெறவுள்ளது. அகழாய்வுகள் மற்றும் முன்களப் புல ஆய்வுக்காக மொத்தமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments