வட மாநிலங்களில் கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டம்.. வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு

0 2707

நாட்டின் வடமாநிலங்களில் கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவியதால், பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.

டெல்லியில் பாலம், பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தரபிரதேசத்தின் லக்னோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மற்றும் அசாமின் துப்ரி ஆகிய பகுதிகளில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

பனிமூட்டம் காரணமாக உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. பனிமூட்டத்தால் இன்று 13 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments