ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் புதிய வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா

0 4349

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் புதிய வீடியோவை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ்.-கே தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க உளவுத்துறை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 10 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அமெரிக்கா விடுவித்தது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments