நாகப்பட்டினத்தில் 1250 பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து வரும் பட்டதாரிப்பெண்

0 8052

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணொருவர் 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து வருகிறார். வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் கணவர் உதவியுடன் இந்தியா முழுக்க தேடிச்சென்று பாரம்பரிய நெல்ரகங்களை கண்டறிந்து பயிரிட்டுள்ளார்.

1250 ரகங்களை மீட்டெடுத்துள்ள அவர் 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு ரகத்திற்கும் 40 சதுர அடி என்ற அளவில் சாகுபடி செய்துள்ளார்.தன் வாழ்நாளில் தொலைந்து போன நெல்ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments