இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் ; மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

0 4805
இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் இணையதளம், யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவிற்கு எதிராக சதி திட்ட செயல்களில் ஈடுபடும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து முடக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பியதாகக் கூறப்படும் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனை, இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் போலிச் செய்திகளைப் பரப்பி வரும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments