இங்கிலாந்தில் அடுத்த வியாழக்கிழமை முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன்

0 3383

இங்கிலாந்தில் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அடுத்த வியாழக்கிழமை முதல் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரீஸ் ஜான்சன், வீட்டில் இருந்தவாறு பணிபிரியுமாறு ஊழியர்களை இனி அரசு அறிவுறுத்தாது என்றும் அவரவர் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுய தனிமைப்படுத்தல், கொரோனா ஹெல்த் பாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாவும் தெரிவித்தார். வரும் வாரம் முதல் பொது இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments