இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு நுசாந்த்ரா என பெயர் அறிவிப்பு
இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு நுசாந்த்ரா என பெயரிட்டுள்ள அரசு 2024ஆம் ஆண்டுக்குள் புதிய தலைநகரை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தலைநகரை ஜாகர்தாவில் இருந்து போர்னியோ தீவிற்கு மாற்ற அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் தற்போதைய தலைநகர் ஜாகர்தா முற்றிலும் நீருக்குள் மூழ்கி விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து தலைநகரை மாற்றும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி உள்ளது.
3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், தொடர் கடல் மட்டம் உயர்வு, நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போர்னியோ தீவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்திற்கு தலைநகரை மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைநகரை உருவாக்க இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய மதிப்பில் 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு நுசாந்த்ரா புதிய தலைநகர் மற்றுமின்றி நிறுவனங்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான இருப்பிடமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
Comments