கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை - உயர்நீதிமன்றம்
கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு, 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மருத்துவ கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்பில் 50% அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு போக மீத இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடும், ஊக்க மதிப்பெண்ணும் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதன் விசாரணையில், அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில் பணிபுரிவதால் மக்கள் பயன்பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையில் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டனர்.
Comments