டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவிப்பு
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா, நடியா கிச்சனோக் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. காயங்கள் குணமடையாததாலும், தனது 3 வயது மகனின் நலன் கருதியும் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் சானியா மிர்சா இந்தியாவின் முதல் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தவர். இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
Comments