சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால தரிசனம் நிறைவு

0 2420

பரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால தரிசனம் நிறைவடைந்தது. சபரிமலை கோவிலில் கடந்த 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

அதில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். மேலும், கடந்த 5 நாட்களாக திருவாபரண அலங்காரத்துடன் இருந்த ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.

இந்நிலையில், இன்று மாலையில் மகர விளக்கு கால தரிசனம் நிறைவடைந்தது. இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் நிலையில், நாளை அதிகாலை பந்தள ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சுவாமி தரிசனம் செய்தபின் கோவில் நடைசாத்தப்படும். நடப்பாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் 147 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments