முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் : காவலர்கள், மக்கள் இடையே உறவை மேம்படுத்த முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், காவலர்கள் - மக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும் காவல் ஆணையம் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர்களுக்கான புதிய பயிற்சி முறைகளை புதிய காவல் ஆணையர் பரிந்துரைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய காவல் ஆணையம் பற்றி 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தத்தாகவும், அந்த அறிவிப்பு தற்போது செயல்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆணையத்தின் உறுப்பினர் - செயலாளராக காவல்துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments