தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

0 3646

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், என அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர். 

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை, வரும் 22-ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments