5 -ஜி சேவையால் விமானங்களுக்கு இடையூறா.? அமெரிக்கா செல்லும் பல விமானங்களை திடீர் ரத்து செய்தது துபாய்
அமெரிக்காவில் 5-ஜி மொபைல் சேவை தொடர்பான சர்ச்சை காரணமாக, அந்நாட்டுக்கான பல்வேறு விமானங்களை துபாய் திடீரென ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய சி பேண்ட் 5-ஜி சேவையானது, விமானங்களில் அதன் பயண உயரத்தை காட்டும் அல்டிமீட்டர் கருவியில் இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அச்சம் காரணமாக சிகாகோ, பாஸ்டன், மியாமி, சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், ஆர்லண்டோ, சியாட்டில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கான விமான சேவையை, மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்வதாக, துபாய் அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
எனினும், நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானப் பயணத்தில் இடையூறை குறைத்து, வான் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான 5-ஜி சேவையை நிறுவிட, அமெரிக்க அரசு ஒரு தீர்வை எட்ட விரும்புவதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
Comments