கிருஷ்ணகிரியில் புதிய தாது உப்பு கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தாது உப்பு கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாது உப்பு கலவை தயாரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், ஈரோட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆவின் நிறுவனத்தின் 5 புதிய பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
புதிதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை விற்பனைக்காக முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
Comments