கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் - இ.பி.எஸ்
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும், என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, டாஸ்மாக் கடைகளால் கொரோனா பரவுவதாக கூறி, அவற்றை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இன்றைக்கு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், டாஸ்மாக் கடை மற்றும் பார்களின் முன்பு நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிற்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது என குறிப்பிட்டுள்ள அவர், உடனடியாக அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Comments