சென்னை ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஜப்தி

0 11397
ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஜப்தி

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத புகாரில், சென்னை ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு இந்த இரு கடைகளின் பெயரில் சுமார் 240கோடி ரூபாய் கடன் இந்தியன் வங்கியில் வாங்கியதாகவும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், வட்டி, அசல் தொகையை செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வட்டியுடன் சேர்த்து மொத்தம் 450கோடி ரூபாய் தொகையை திருப்பி செலுத்துமாறு பல முறை இந்தியன் வங்கி தரப்பில் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அதற்கு கடை தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததால், காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வங்கி அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்து ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடனை கட்டவில்லை என்றால் அடுத்த கட்டமாக இரண்டு கடைகளுக்கு சீல் வைக்க வங்கி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments