தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே, மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடித்து, பொதுமக்கள் மிகுந்த உஷாராக இருக்குமாறு, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4கோடியே 80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கை மாற்று அறுவை சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைத்த அவர், 2கோடியே 98லட்சம் ரூபாய் மத்ப்பில் புற்றுநோய் கதீர்விச்சு சிகிச்சைக்கான மையத்தையும் திறந்து வைத்தார்.
பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் பிற நோய்களுக்கான சிகிச்சை தடையின்றி வழங்கப்படுகிறது என்றார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது எனவும், நாள்தோறும் ஒன்றரை லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 21ஆயிரம் குக்கிராமங்களில் 24ஆயிரத்திற்கும் மேலான கிராமங்களில் தொற்று பாதிப்பு இருக்கிறது எனவும், கொரோனா காரணமாக 3,787 தெருக்கள் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
Comments