பீஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் 5,000 ஊழியர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வீரர்- வீராங்கனைகளுக்கு உதவும் வகையில், ஒலிம்பிக் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர். சிலர் அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இவர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்த ஓட்டல்களுக்கு, பிரத்யேக தானியங்கி மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் 27-ம் தேதி போட்டியாளர்கள் வந்ததும் ஒலிம்பிக் கிராமம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது.
Comments