தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றார் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி
ஆப்கானிஸ்தானின் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் துருக்கி சென்றுள்ளார்.
ஆப்கானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் , அங்குள்ள அரசியலை வடிவமைப்பதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் துருக்கி சென்ற சயஃப் என்ற ஐ.எஸ்.ஐ. அதிகாரி பல ஆப்கான் தலைவர்களை நேரடியாக சந்தித்துப் பேசினார். இதில் இந்தியாவுக்கு ஆதரவான தலைவர்களும் தாலிபனை எதிர்க்கும் தலைவர்களும் அதிகளவில் இடம் பெற்றனர்.
அவர்களுக்கு தாலிபன் தலைவர்களுடன் சமரசம் செய்து வைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவை தலையிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
Comments