ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

0 9990
ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி கனவாக இருக்க கூடாதா என்று ஆதங்கம் தெரிவித்துள்ள இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடுமாறு நடிகர் தனுஷுக்கு அறிவுரை கூறிஉள்ளார்.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியர் 18 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் நிம்மதியை தேடுவதாக அறிவித்திருந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த செய்தி கனவாகவோ, பொய்யாகவோ இருக்க கூடாதா என்று ஆதங்கப்பட்டுள்ளார்

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வீடுதோறும் வேதனை இருக்கும்... உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு... என்று கண்ணதாசனின் பாடல் வரியை நடிகர் தனுஷுக்கு சுட்டிக்காட்டி உள்ளார் எஸ்.ஏ.சி

தி.நகர்ல பர்ச தொலைச்சிட்டு திருவல்லிக்கேணியில் தேடக்கூடாது என்றும் வாழ்க்கையை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்றும் தனுஷின் நடவடிக்கையை மறைமுகமாக சாடி உள்ள எஸ்.ஏ. சந்திர சேகர், இது அட்வைஸ் அல்ல ரசிகனின் குரல் என்று தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments