பான்காங் ஏரி மீது மேம்பாலம் கட்டும் பணியை நிறைவு செய்கிறது சீனா
இந்திய எல்லை அருகே பான்காங் ஏரியின் மீது மேம்பாலம் கட்டும் பணியை சீனா முடிக்கும் நிலையில் உள்ளது.
சுமார் 400 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம் மூலம் எல்லைக்குப் படைகளையும் தளவாடங்களையும் சீனா விரைவாகக் கொண்டு செல்ல முடியும்.. உறைந்த ஏரியின் மீதான இந்த மேம்பாலம் சீனாவின் கரைகளை இணைக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த மேம்பாலம் தொடர்பான சாட்டிலைட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 10 மணி நேரம் பயணித்தால்தான் சீனப்படைகள் ஏரியை சுற்றி வந்து மறுகரையை எட்டமுடியும். ஆனால் இந்த மேம்பாலத்தின் உதவியால் சீனப் படைகள் 200 கிலோ மீட்டர் தூர பயணத்தில் 150 கிலோமீட்டர் பயணத்தைக் குறைக்க வாய்ப்பு உருவாகும்.
எல்லையை நோக்கி புதிய சாலைகள், பாலத்தை சீனா கட்டி வருவதை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்திய எல்லையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments