பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு நிராகரிப்பு
பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
100 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அனில் தேஷ்முக் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்தது. அனில் தேஷ்முக் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments