கோவா தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் இன்று அறிவிப்பு

0 4131
கோவா தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

கோவா தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை இன்று அறிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில், கோவா பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 14இல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், கோவாவை பொறுத்தவரை ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments