மல்லையா குடும்பத்தினர் தங்கியுள்ள பங்களாவைக் கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

0 2456
மல்லையா குடும்பத்தினர் தங்கியுள்ள பங்களாவைக் கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

கடன் பாக்கிக்காக லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மல்லையாவின் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.

பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பங்களாவில் மல்லையா குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இந்த பங்களா கடந்த 2012ம் ஆண்டு 20 மில்லியன் பவுண்டுகளுக்காக ஸ்விட்சர்லாந்தின் UBS என்ற வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு கடந்த 2017ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் தொடரப்பட்ட வழக்கில் பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments