சுற்றுலா பயணிகளின் காரை தலைகீழாக புரட்டி தள்ளிய யானை

0 2621

தென்ஆப்பிரிக்காவில்  கோபம் கொண்ட யானை ஒன்று காரினை தலைகீழாக புரட்டி தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் iSimangaliso Wetland பூங்காவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் சுற்றிப் பார்த்த வண்ணம் இருந்தனர். அப்போது ஆத்திரத்துடன் எதிரே வந்த யானை அந்த காரை தனது தும்பிக்கையால் தலைகீழாக புரட்டியது. காரில் இருந்த தாய், தந்தை மற்றும் 2குழந்தைகள் உயிர் பயத்தில் அலறினர்.

ஆனால் அந்த யானையோ சிறிதும் சட்டை செய்யாமல் காரை ஏதோ கால்பந்து விளையாடுவது போல புரட்டி தள்ளியபடி இருந்தது. இதனைக் கண்ட மற்றொரு காரில் இருந்தவர்கள் ஹாரனை பயங்கர சத்தத்துடன் ஒலிக்க விட்டு யானையின் கவனத்தை திசைதிருப்பினர்.

இதனைத் தொடர்ந்து அந்த யானை அங்கிருந்து சென்றதை அடுத்து காரில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments