சொத்துத் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு : வீடு - வாகனங்கள் சூறை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சொத்துத் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததுடன் வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் அவரது தம்பி மனைவி ராஜகுமாரி என்பவருக்கும் பல ஆண்டுகளாக சொத்துத் தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவு ராஜகுமாரியின் மகன் வீரபிரசாத், அவரது தம்பி ஆகியோர் 20க்கும் மேற்பட்டோருடன் சுப்பிரமணியன் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அரிவாளால் வெட்டியதுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments