ஜாகர்தாவில் இருந்து தலைநகரை மாற்றுகிறது இந்தோனேசியா

0 3578

ந்தோனேசிய தலைநகரை  காளிமன்டன் என்னுமிடத்திற்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய தலைநகரை கட்டமைக்க 32 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில், சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெகா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு, வெள்ளம், நெரிசல் போன்ற பிரச்னைகளால் தலைநகரை மாற்ற அதிபர் ஜோகோ விடோடோ முடிவு செய்ததாகவும், புதிய தலைநகருக்கு "நுசன்டரா" என்ற பெயரை சூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காடுகள் நிறைந்த காளிமன்டன் பகுதியில், மருந்து, ஆரோக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த, குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments