குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டது தொடர்பாக முதலமைச்சருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம்

0 4295

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் நடைபெறவிருக்கும் அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் எழுதிய பதில் கடிதத்தில், அலங்கார ஊர்திகள் தொடர்பாக 29 பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும், முதல் 3 சுற்றுகள் தமிழ்நாட்டின் ஊர்தி பரிசீலனையில் இருந்ததாக குறிப்பிட்டார்.

அதன் பிறகு வெளியிடப்பட்ட 12 ஊர்திகளைக் கொண்ட இறுதிப்பட்டியலில் தமிழக ஊர்தி இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு தான் ஊர்திகளை தேர்வுசெய்யும் என்றும் 2017, 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments