பனிச்சரிவில் சிக்கி தவித்த பொதுமக்கள் 30 பேரை மீட்ட ராணுவத்தினர்
ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தவித்த பொதுமக்கள் 30 பேரை, ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.
சௌகிபால்-தங்தார் சாலையில் இருவேறு பனிச்சரிவு சம்பவங்களில், பொதுமக்கள் சிக்கியிருந்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், ஒரு இடத்தில் 14 பேரையும், மற்றொரு இடத்தில் 16 பேரையும் மீட்டதாக, ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்கப்பட்ட அனைவருக்கும் உணவு, மருத்துவ வசதி மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டதாகவும், ஆபத்தான அதே பகுதிகளில் இருந்து, இன்று மதியம் 12 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments