ஆஸ்திரேலிய கடலில் தென்பட்ட அரிய வகை "பிளாங்கெட் ஆக்டோபஸ்"
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் உள்ள பவளத்திட்டுகளுக்கு இடையே அரிய வகை பிளாங்கெட் (Blanket) ஆக்டோபஸ் ஒன்று தென்பட்டுள்ளது.
பவளப்பாறைகளுக்கு அருகே வாழும் இவ்வகை ஆக்டோபஸின் கைகளை சுற்றி போர்வை போல் தோல் படர்ந்துள்ளதால் இவை Blanket Octopus என அழைக்கப்படுகின்றன.
ஆண் ஆக்டோபஸ் இரண்டரை செண்டிமீட்டர் நீளம் மட்டுமே வளரக்கூடிய நிலையில், பெண் ஆக்டோபஸோ 6 அடி நீளம் வரை வளரும். அதாவது ஆண் ஆக்டோபஸை விட பெண் ஆக்டோபஸ் 40,000 மடங்கு எடை அதிகமாக இருக்கும்.
ஆரஞ்சு நிறத்தில் கண்ணாடி போல் மின்னும் இந்த பெண் ஆக்டோபஸின் அழகில் மயங்கி ஆண் ஆக்டோபஸ் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அதன் பின் ஆண் ஆக்டோபஸ் சோர்வடைந்து உடனடியாக இறந்து விடும்.
பெண் ஆக்டோபஸ் ஒரு லட்சம் முட்டைகள் வரை இடும். எலியட் தீவு அருகே கடல்வாழ் உயிரினங்களை படம் பிடித்து கொண்டிருந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர் இந்த பிளாங்கெட் ஆக்டோபஸை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
Comments