கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுத்தை உடல்நசுங்கி பலி
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 17 வயதுடைய ஜெயா என்ற சிறுத்தை, கூண்டுக்குள் உடல்நசுங்கி பலியானது.
அங்கு 76 பூங்கா ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விலங்குகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பரிசோதனை செய்வதற்காக, ஜெயா என்ற 17 வயது சிறுத்தை கூண்டுக்குள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
மாதிரிகள் எடுக்கும் போது சிறுத்தை நகரக்கூடாது என்பதற்காக, கூண்டு குறுகலாகவும், சிறியதாகவும் இயந்திரம் மூலம் மாற்றப்படும். அப்போது, இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, கூண்டை மீண்டும் பெரிதாக்க இயலாமல் போகவே, கூண்டுக்குள் இருந்த சிறுத்தை மூச்சுத்திணறியும், உடல்நசுங்கியும் பலியானதாக கூறப்படுகிறது.
Comments