மலேசியா பத்து மலை முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழா
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவின் பத்து மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
கடுமையான கோவிட் கெடுபிடிகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலையில் பால் குடம் ஏந்தி நடந்து வந்த பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
கோவில் அருகே உள்ள நதிக்கரையில் முருகப்பெருமானுக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்ட நிலையில், சில பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
Comments