"அபுதாபியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" - ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

0 2658

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.

அபுதாபி விமான நிலையப் பகுதிக்கு அருகே உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர்.

அமீரகத்தின் முக்கிய இடங்களை குறி வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் செய்தித் தொடர்பாளர் Yahya Saree தெரிவித்துள்ள நிலையில், அமீரக மண்ணில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் சையித் அல் நயான் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஹவுத்தி படைக்கு சொந்தமான 8 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஏமனில் ஈரானின் உதவி பெறும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் இயங்கும் ஏமன் அரசுக்கும் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதுடன் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் பஞ்சத்துக்கு ஏமன் தள்ளப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments