திண்டுக்கல்லில் கொடுத்த கடனை திருப்பி செலுத்த சொல்லி முதியவர்களை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

0 5331

திண்டுக்கல் அருகே வாங்கிய கடனை மகன் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி முதிய தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை கவுண்டன்பட்டியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகனான செல்வக்குமார் அதே அகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த சொல்லி சிவக்குமார் மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து கருப்புச்சாமி மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments