கரூரில் பாஜக கொடி கம்பத்தை சேதப்படுத்திய கார் மீது பாஜகவினர் தாக்குதல்.!
கரூரில் மாவட்ட பாஜக அலுவலக திறப்பு விழாவின் போது பாஜக கொடிகம்பங்களை சேதப்படுத்தி வந்த கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் பாஜக மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் காரையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்தவர்கள் பள்ளபட்டி நகராட்சி அதிகாரிகள் என்றும், அவர்கள் மது போதையில் கொடி கம்பங்களை சாய்த்து விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
Comments