காலிஸ்தான் பயங்கரவாதி ஜஸ்வந்தர் குறித்து தகவல் அளிப்பவருக்கு 10 லட்ச ரூபாய் வெகுமதி.!
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி ஜஸ்வந்தர் சிங் முல்தானி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து மும்பை உள்பட நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஜஸ்வந்தர் சிங் முல்தானி மீது என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஜஸ்வந்தர் சிங் முல்தானி குறித்து தகவல் அளிப்பவருக்கு 10 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. கூறியுள்ளது.
Comments