அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 6 பேர் சுழலில் சிக்கி பரிதாபமாக பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச்சென்ற 6 பேர் சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடுவாய் அண்ணாமலை கார்டன் குடியிருப்பைச் சேர்ந்த 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, வேனில் திருப்பூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வழியில் தாராபுரம் அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதைப் பார்த்து ஆர்வ மிகுதியில் வேனை நிறுத்தி, 8 பேர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக அவர்களில் 6 பேர் நீர்ச்சுழலில் சிக்கி தத்தளித்த நிலையில், உடன் சென்றவர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, 6 பேரின் சடலங்களையும் மீட்டனர்.
Comments