பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றக் கோரிக்கை - தேர்தல் ஆணையம் பரிசீலனை

0 5202
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் தேதியை மாற்றும்படி அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் தேதியை மாற்றும்படி அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 21 அன்று தொடங்க உள்ளது.

பஞ்சாபின் பட்டியல் இனத்தவர் பிப்ரவரி 16ஆம் நாள் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் குரு ரவிதாஸ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க முன்கூட்டிப் பயணத்தைத் தொடங்குவர்.

இதனால் வாக்குப்பதிவை மற்றொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் சரண்ஜித் சிங்கும், பாஜகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments