மகர சங்கராந்தியை ஒட்டி, தடையை மீறி நடைபெற்ற எருதுவிடும் விழா.. ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு வழிமுறைகள்..!
மகர சங்கராந்தியை ஒட்டி, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தடையை மீறி நடைபெற்ற எருதுவிடும் விழாவில், ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ரங்கம்பேட்டா கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், வர்ணங்கள் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை அள்ள, காளையர்கள் முண்டியடித்துக் கொண்டு நின்ற நிலையில் கையிலேயே சிக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.
கொரோனா காரணமாக, எருதுவிடும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கூடியிருந்தது, தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments