துபாயில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாயத் தனிமை அவசியமில்லை - மும்பை மாநகராட்சி
துபாயில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்பு துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையும் ஏழுநாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலும் அவசியமாக இருந்தது.
தற்போது இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.இது குறித்த அறிக்கையில் ஆபத்து இல்லாத வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பட்டியலில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகப் பயணிகள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
Comments