ரஷ்யா இணைய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளது - உக்ரைன்
தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இணைய தாக்குதல் நடத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் அரசின் முக்கிய இணையதளங்கள் முடக்கப்பட்டன. இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் மீது படையெடுக்கத் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
இந்நிலையில் உக்ரைன் மக்களின் சமூகத்தைப் பயமுறுத்துவதும், பொருளாதாரத்தைச் சீரழிப்பதும் ரஷ்யாவின் நோக்கமாக உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் உக்ரைன் அரசின் குற்றச்சாட்டினை ரஷ்யா மறுத்துள்ளது.
Comments