திருமணமாக உள்ள பேத்திக்கு இன்ப அதிர்ச்சி : 365 வகையான உணவுகளை பரிமாறி ஆச்சர்யப்படுத்திய தாத்தா, பாட்டி !

0 6449

ந்திராவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது பேத்தி, அவருடைய வருங்கால கணவருக்கு 365 வகையான உணவுகளை தாத்தா - பாட்டி ஆகியோர் பரிமாறி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தை சேர்ந்த குந்தவி - கோவிந்த் ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் திருமணமாக உள்ள தனது பேத்தி மற்றும் அவரது வருங்கால கணவருக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா - பாட்டி, தடபுடலாக விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விருந்தில், நூறு வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ் கிரீம் வகைகள், கேக்குகள் என 365 வகையான உணவுகள் பரிமாறப்பட்டதை அடுத்து மணவாழ்க்கையில் நுழைய உள்ளவர்கள் திக்குமுக்காடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments