நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

0 5111

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகிறது.

இந்நிலையில், 'சிபிஐ-5' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பின் போது மம்மூட்டிக்கு ஜலதோஷம், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மேலும், அப்படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிய போதும், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மம்மூட்டி, மிதமான காய்ச்சல் மட்டுமே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments