வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக காவல் ஆய்வாளர் மீது விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!

0 8026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் இளங்கோ மீது விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளங்கோ மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகார் மீதான விசாரணை தாமதமாவதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விஜய் ஆனந்த் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இதன் விசாரணையில், ஆய்வாளர் இளங்கோ மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை விபரங்களை வரும் மார்ச் 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments