கொத்தமல்லி கட்டுகளை சாலைகளில் வீசி எறிந்த விவசாயி.. காய்கறி விற்பனைக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி ஆத்திரம்.!
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் காவல்துறையினர் காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி மறுப்பதாக கூறி விவசாயி ஒருவர், தான் மூட்டைகளில் வைத்திருந்த கொத்தல்லியை சாலையில் வீசியெறிந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
கொரோனா பரவலால் கர்நாடகாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயாபுராவில் காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிறு முழு ஊரங்கை காரணம்காட்டி சந்தைக்கு அருகே சாலையோரங்களில் இருந்த காய்கறிக் கடைகளை மூட காவல்துறையினர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பீமேகவுடா என்பவர் தான் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த கொத்தமல்லி கட்டுகளை சாலை முழுவதும் வீசி எறிந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
Comments