வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது ஆண் சிங்கம் உயிரிழப்பு.!
செங்கல்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயதுடைய ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. சிங்கம் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து கண்டறிய அதன் உடல், உடற்கூறு ஆய்வுக்காக சென்னை வேப்பேரியில் உள்ள கால்மடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களில் 70 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியதையடுத்து பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கமும் கொரோனா பாதிப்பாலேயே உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதன் பரிசோதனை மாதிரிகளும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments