பிரபல திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதி - மருத்துவர்கள்

0 5017

பிரபல திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

92 வயதான அவர் கடந்த வாரம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இணைப் பேராசிரியர பிரதித் சம்தானி, லதா மங்கேஷ்கர் மேலும் சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார்.

வயது மூப்பு காரணமாக அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுவதாகவும் அதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments